Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விலை அதிகரிப்பால் இரும்பு ஷெட் அமைக்கும் செலவு உயர்வு

விலை அதிகரிப்பால் இரும்பு ஷெட் அமைக்கும் செலவு உயர்வு

வீடுகளுக்கான கிரில் கேட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு கிலோ ரூ.80-லிருந்து ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. சாதாரண கிரில் கேட் தயாரிக்க கட்டணம் கிலோ ரூ.150 ஆக அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஈரோட்டில் இரும்பு கிரில் கேட், துருப்பிடிக்காத எஃகு (எஸ்எஸ்ஸ்டீல்) கதவுகள் தயாரிக்கவும், கூரை ஷெட்கள் அமைக்க செலவு அதிகரித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இரும்பு வேலைகளை செய்யும் ராஜ்குமார் கூறியதாவது: வீடுகளுக்கான இரும்பு கிரில் கேட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு கிலோ ரூ.80-லிருந்து ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. சாதாரண இரும்பு கிரில் கேட் தயாரிக்க கட்டணம் கிலோ ரூ.140-லிருந்து ரூ.150 ஆக அதிகரித்துள்ளது. இதில் கூலிப் பங்கு கிலோவுக்கு சுமார் ரூ.30 ஆகும்.

துருப்பிடிக்காத எஃகு (எஸ்எஸ்ஸ்டீல்) விலையும் கிலோவுக்கு ரூ.15 உயர்ந்து தற்போது ரூ.450 ஆக உள்ளது. இதைப் பயன்படுத்தி கதவுகள் தயாரிக்க கூலி கிலோவுக்கு சுமார் ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. டாடா ஸ்டீல் கூரைத் தகடுகளைப் பயன்படுத்தி ஷெட் அமைக்க செலவு முன்பு சதுர அடிக்கு ரூ.150 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.160 ஆக உயர்ந்துள்ளது. கூரைத் தகடுகளின் விலையும் ரூ.45-லிருந்து ரூ.50 ஆக அதிகரித்துள்ளது

சூரிய ஒளி உள்ளே புகும் வகையிலான பாலிஃபைபர் தகடுகளையும் கூரை அமைக்கப் பயன்படுத்துகின்றனர். இத்தகடுகளின் விலை சதுர அடிக்கு ரூ.70 ஆக உள்ளது. பாலிஃபைபர் தகடுகளைப் பயன்படுத்தி, கூலி உட்பட ஷெட் அமைக்க மொத்தச் செலவு சதுர அடிக்கு சுமார் ரூ.120 ஆகும். பாலிஃபைபர் கூரைகள் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், வெயில், மழையின் தாக்கம், பராமரிப்பு ஆகியவற்றைப் பொறுத்து 7 முதல் 12 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். குறிப்பிட்ட தயாரிப்பின் ஆயுட்காலத்தை அதன் விநியோகஸ்தரிடம் உறுதிப்படுத்துவது அவசியம் என்று ராஜ்குமார் கூறினார்.

இரும்பு உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கிரில் கேட், படிக்கட்டுகள், கூரை ஷெட்கள் அமைக்கும் செலவு அதிகரித்துள்ளது.

முந்தைய செய்தி
Truckers' protest halts production of Italy's buffalo mozzarella
அடுத்த செய்தி
Centre notifies telecom regulatory sandbox rules 2026

தொடர்புடைய செய்திகள்